வர்ணனையாளரானார் தினேஷ்கார்த்திக்

இந்தியா, நியூசிலாந்து பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு வர்ணனையாளராகச் செயல்படத் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆகிய இரண்டு இந்தியர்கள் தேர்வாகியுள்ளனர். தினேஷ் கார்த்திக் இன்னும் இந்திய அணியிலிருந்து ஓய்வுபெறவில்லை. இவர் ஜூலை மாதத்தில் நடைபெறவிருக்கும் இலங்கை சுற்றுப் பயணத்தில் பங்கேற்பார் எனக் கூறப்பட்டது. தற்போது இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு வர்ணனையாளராகத் தேர்வாகியிருப்பதால், இவர் இலங்கை பயணத்தில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. சுனில் கவாஸ்கர் பல கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனையாளராகச் செயல்பட்டு, அனுபவமிக்கவராக உள்ளார். தினேஷ் கார்த்திக் சில போட்டிகளுக்கு மட்டுமே வர்ணனை செய்துள்ளார். தினேஷ் கார்த்திக் கடைசியாக 2018ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்று விளையாடியுள்ளார். அதன்பிறகு, ரிஷப் பன்ட் சிறப்பாக விளையாடி கார்த்திக்கின் இடத்தை தட்டிப் பறித்துவிட்டார்….

Related posts

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி

கரீபியன் லீக் டி20 தொடர்: பார்படாஸை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது கயானா

குவாலியரில் நாளை வங்கதேசத்துடன் முதல் டி20 போட்டி: இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக்சர்மா-சஞ்சுசாம்சன் களமிறங்க வாய்ப்பு