வருவோர், வெளியேறுவோரை கண்காணிக்க வைக்கலாம் மசாஜ் சென்டருக்குள் கேமரா: தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து

மதுரை: திருச்சி, அண்ணா நகர், தில்லை நகர் மெயின் ரோட்டில் ஆயுர்வேத ஸ்பா நடத்துவதற்கான தடையில்லா சான்றை போலீசார் வழங்குமாறு உத்தரவிடக் கோரி பயல் பிஸ்வாஸ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: இதைப்போன்ற ஒரு வழக்கில் ஸ்பா, மசாஜ் சென்டர்கள் மற்றும் தெரபி மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி இருப்பதையும், இவை முறையாக இயங்குவதையும் உறுதிப்படுத்தவும் வேண்டும். மசாஜ் சென்டர்கள் தங்களது பணியை வெளிப்படைத்தன்மையுடனும், சட்டவிரோத செயல்களுக்கு இடம் தராமலும் நடத்த வேண்டும்.இந்த இடங்களில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக புகார்களோ அல்லது நம்பத்தகுந்த தகவல்களோ கிடைத்தால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்களை வைப்பது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இருக்கும். ஆனால், இந்த இடத்திற்கு வரும்போதும், வெளியே செல்லும்போதும் வந்து செல்வோரை கண்காணித்திடும் வகையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தலாம். இந்த விவகாரத்தில் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரரின் மனுவை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து தடையில்லா சான்று வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்….

Related posts

2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்

மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சிறுமியின் ஆபாச படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல்; கூலிப்படையை அனுப்பி பைனான்ஸ் அதிபர் கொலை: 8 பேர் கும்பலுக்கு வலை; தந்தையிடம் விசாரணை