வருவாய் பற்றாக்குறை மானியம் தமிழகத்துக்கு ரூ.183 கோடி ஒன்றிய அரசு ஒதுக்கீடு

புதுடெல்லி: வருவாய் பற்றாக்குறை மானியத் தவணையாக நாடு முழுவதும் 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு 2021-22ம் ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை மானியத் தவணைத் தொகையாக ரூ.9,871 கோடியை ஒன்றிய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நேற்று வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்துக்கு மட்டும் ரூ.183.67 கோடி கொடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரையில் மொத்தம் ரூ.69,097 கோடி இந்த நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை மானியமாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் மாநிலங்களின் வருவாய் கணக்கில் உள்ள இடைவெளியை போக்கும் விதமாக நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த மானியங்கள் மாதத் தவணைகளாக வழங்கப்பட்டு வரப்படுகிறது. 17 மாநிலங்களுக்கு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை வழங்க 15வது நிதி ஆணையம் முன்னதாக பரிந்துரைத்துள்ளது. இதில் தமிழகம் ஆந்திரா, அசாம், அரியானா, இமாச்சல், கர்நாடகா, கேரளா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களும் அடங்கும். இதில் தற்போது வழங்கப்பட்டுள்ள ரூ.183.67 கோடி தொகையுடன் சேர்த்து இதுவரை மொத்தம் ரூ.1,285.67 கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது….

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்