வரும் 30ம் தேதிக்குள் சிறப்பு குழந்தைகளுக்கான அரசின் உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவாரூர், செப்.26: திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஆட்டிசம் மாற்றுதிறனாளிகள்அரசின் கூடுதல் உதவிதொகையினை பெறுவதற்கு வரும் 30ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பினைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கமுடைய (ஆட்டிசம்) மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.2 ஆயிரம் -வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படஉள்ளது.

அதனைதொடர்ந்து மாவட்டத்தில் புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கமுடைய மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிக்கான தேசியஅடையாளஅட்டை, மாற்றுத்திறனாளிக்கான தனித்துவம் வாய்ந்த அடையாளஅட்டை, ஆதார் அட்டை, குடும்பஅட்டை, இணை வங்கிகணக்கு, வருவாய்துறை மூலம் உதவித்தொகை பெறவில்லை என்று சம்பந்தப்பட்ட தனிவட்டாட்சியரிடம் பெறப்பட்ட தடையின்மை சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்ணுடன் அருகிலுள்ள இ-சேவை மையத்தில் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பதிவுசெய்து விண்ணப்பத்தினை வரும் 30ந் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் சமர்ப்பித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது