வரும் 16ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

ஊட்டி, பிப்.6: ஊட்டியில் வரும் 16ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 16ம் தேதி காலை 11 மணிக்கு ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், அக்கோரிக்கைகளை வரும் 7ம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குநர், தபால் பெட்டி எண் 72, ஊட்டி 643001 என்ற அலுவலக முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்வதால், விவசாயிகள் விவசாயம் சம்பந்தமாக குறைகள் இருப்பின், இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம். எனவே நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்