வருடத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்வு : ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ரூ.36,472-க்கு விற்பனை!!

சென்னை : சமீப காலமாகவே சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஏதோ ஒரு நாள் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுகிறது. இதனால் நகை வாங்குவோர் பெரும் சிரமத்தில் உள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,559-க்கும் சவரன் ரூ.36,472-க்கும் விற்பனை செயப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.66.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த நிலையில், புத்தாண்டில், 10 கிராம் தங்கத்தின் விலை 55 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று நோய் பரவல் அதிகரிப்பு, பணவீக்க பிரச்னைகள், அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்து வருவது ஆகியவற்றுக்கு இடையேயும், புத்தாண்டில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, ‘காம்டிரெண்ட்ஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஞானசேகர் தியாகராஜன் கூறியதாவது:உள்நாட்டை பொறுத்த வரையில், புத்தாண்டு துவக்கத்தில் தங்கத்தின் விலை 45 – 50 ஆயிரம் ரூபாயாக இருக்கும். இரண்டாவது பாதியில், 55 ஆயிரம் ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

அக்.07: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.