வருசநாடு பகுதியில் நெடுஞ்சாலை மையக்கோடு அமைக்கும் பணி தீவிரம்

 

வருசநாடு, மார்ச் 4: வருசநாடு முதல் கண்டமனூர் கிராமம் வரை நெடுஞ்சாலைத்துறையில் மைய கோடு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருசநாடு-கண்டமனூர் சாலையில் போக்குவரத்து நெரிசல், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்தது இதனை தடுப்பதற்கு நெடுஞ்சாலைத் துறை மூலம் மையக் கோடு அமைக்கும் பணியும், வேகத்தடைக்கு வண்ணம் தீட்டும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனால் இப்பகுதியில் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு நெடுஞ்சாலைத்துறை மூலம் விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,“விபத்துக்களை தடுப்பதற்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், பொதுமக்கள் நலன் கருதியும் மையக் கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து