வருசநாடு அருகே பயிர்களை நாசம் செய்யும் பன்றிகள்-கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வருசநாடு : வருசநாடு அருகே, விளைநிலங்களில் பயிர்களை காட்டுபன்றிகள் நாசம் செய்து வருகின்றன. இவைகளை கட்டுப்படுத்த, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வருசநாடு அருகே, கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அருகுவெளி, முத்தாலம்பாறை, கருப்பையாபுரம், வாய்க்கால்பாறை, ஆத்துக்காடு, பாம்பாடும்புதூர், ஆட்டுப்பாறை, உப்புத்துறை, யானைக்கெஜம் ஆகிய பகுதிகளில் தட்டாண் பயறு, மொச்சை, சோளம் ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன.இந்நிலையில், இரவு நேரங்களில் வரும் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் விவசாயிகள் பட்டாசு வெடித்து காட்டுப்பன்றியை விரட்டுகின்றனர். எனவே, விளைநிலங்களில் பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து விவசாயி கருப்பையா கூறுகையில், ‘விளைநிலங்களில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் அதிகமாக வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வெண்டும்’ என்றார்….

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை