வருசநாடு அருகே இலவச பட்டா வழங்க விவசாயிகள் கோரிக்கை

வருசநாடு, ஜூலை 26: வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிங்கராஜபுரம் பசுமலைதேரி, பண்டாரவூத்து, ஓத்தகுடிசை போன்ற பகுதிகளில் 170க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாய நிலங்கள் அனைத்தும் பூமிதான போர்டு மூலம் இயங்கி வருகிறது. இதற்கு என்று கணினி சிட்டா, கணினி பட்டா இவை இல்லாமல் விவசாயிகள் இலவச மின்சாரம் பண்ணைக்குட்டை, மண்வரப்பு வங்கிக் கடன்கள் கூட்டுறவு சொசைட்டிகளில் கடன்கள் பெற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக கடந்த 25 ஆண்டு காலமாக இப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் மனு அளித்த வண்ணமாக இருந்து வருகிறார்கள். ஆனாலும் இதுவரையும் இவர்களுக்கு என்று எவ்வித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கப்படவில்லை என கூறுகின்றனர். இது குறித்து பூமிதான விவசாயி மகாலிங்கம் கூறுகையில், ‘‘விவசாயிகள் விவசாய நிலங்களைத் தரிசு நிலங்களாக போட்டுவிட்டு பிழைப்பு தேடி வேறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்ற வண்ணமாக இருந்து வருகிறார்கள். இதனால் இப்பகுதியில் விவசாயம் முறையாக நடைபெறுவதற்கு தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்பதே எங்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது’’என்றார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்