வரி விலக்கு அளிக்க கோரி துணை ராணுவத்தினர் மனு

 

சிவகங்கை, செப்.26: துணை ராணுவத்தினரின் குடும்பங்களுக்கு வீட்டு வரி, குடிநீர் வரிகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் ஆஷாஅஜித்திடம் மனு அளிக்கப்பட்டது.  முன்னாள் துணை ராணுவத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள துணை ராணுவத்தினர் இணைந்து சங்கம் அமைத்து பல்வேறு சேவைகளை செய்து வருகிறோம். நாட்டின் பாதுகாப்பில் துணை ராணுவத்தினரின் பங்கு அளப்பரியதாகும்.

ராணுவத்திற்கு இணையாக சேவை செய்தாலும் துணை ராணுவத்திற்கென என எந்த சலுகையும் கிடையாது. தற்போது கேரள அரசு துணை ராணுவத்தினரின் குடும்பங்களுக்கு வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவதில் இருந்து விலக்களித்துள்ளது. தமிழ்நாட்டில் கூடலூரில் வீட்டு வரி, குடிநீர் கட்டுவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்திலும் வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை