வரி ஏய்ப்பு மோசடியில் டிரம்ப் நிறுவனங்கள்: குற்றச்சாட்டு உறுதியானது

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் `தி டிரம்ப் ஆர்கனைஸேசன்’, `டிரம்ப் பே ரோல் கார்ப்’ ஆகிய இரண்டு நிதி நிறுவனங்களும் 13 ஆண்டுகளாக தவறான தகவல்களை அளித்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றப்பிரிவின் கீழான 17 குற்றச்சாட்டுகளிலும் இந்நிறுவனங்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டன. நியூயார்க் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில், தொடர்ந்து 2 நாட்களாக 10 மணி நேரம் நடந்த வக்கீல்கள் வாதத்துக்கு பிறகு குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டது. அதில், `இந்நிறுவனங்கள் 13 ஆண்டுகளாக போலி தரவுகளை வழங்கி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஜனவரி 13ம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். அப்போது,  2 நிறுவனங்களுக்கும் தலா ரூ.13.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படுகிறது என்று தெரிகிறது. அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள டிரம்புக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது….

Related posts

முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலமில்லை; ஈரான் அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை: வரும் 5ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு

மாலத்தீவு அதிபருக்கு எதிராக சூனியம் வைத்ததாக 2 அமைச்சர்கள் கைது

பெருவில் பூமிக்கு அடியில் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு