வரி எய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அபராதம் மட்டுமில்லாமல் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை: காளான்களை போல வரி ஏய்ப்பு அதிகரித்து வருகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. வரி எய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அபராதம் மட்டுமில்லாமல் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வணிக வரித்துறை விதித்த விற்பனை வரியை ரத்து செய்யக் கோரி திருப்பூரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் திருப்பூர் ஸ்ரீ அன்னப்பூர்ணா ஹோட்டல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, திருப்பூர் ஸ்ரீ அன்னப்பூர்ணா ஹோட்டல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்கள் உத்தரவில், மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் வரி வருவாய் முக்கிய பங்காற்றுவதாகவும், இவ்வாறு வரி ஏய்ப்பு செய்வதால் நாடு மிகப் பெரிய பிரச்னைகளை சந்திப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். தங்களது உண்மையான வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் நாட்டில் காளான்களை போல அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளதுடன், இதுபோன்ற செயலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு தகுந்த அபராதம் விதிப்பதோடு, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர். சில ஹோட்டல் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், தரமான உணவு வழங்காமல் பொதுமக்களுக்கு உடல் ரீதியான கோளாறுகளை ஏற்படுத்துவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் வேதனை தெரிவித்துள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்