வரியை செப்.30க்குள் செலுத்த வேண்டும்: செயல் அலுவலர் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம்,செப்.25: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சொத்து வரியை அபராதமின்றி வரும் 30ம் தேதிக்குள் செலுத்தி பயனடையுமாறு பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் ஆர்.எஸ்.மங்கலம், செட்டியமடை, பிச்சனாகோட்டை, பெருமாள் மடை, கீழக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 15 வார்டுகள் உள்ளது. இவற்றுள் ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளது. இவைகளுக்குறிய சொத்து வரியை பொதுமக்கள் வருடத்திற்கு 2 முறையாக பேரூராட்சிக்கு செலுத்தலாம். அதன்படி ஏப்.1ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரையிலான காலத்திற்கு முதலாம் அரையாண்டிற்கான சொத்து வரியை செப்டம்பர் 30ம் தேதிக்குள்ளும்,

அக்.1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்திற்கான இரண்டாம் அரை ஆண்டிற்கான சொத்து வரியை மார்ச் 31ம் தேதிக்குள் கட்டி முடிக்க வேண்டும். அதன்படி பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் சொத்து வரிகளை பொதுமக்களிடம் வசூலிப்பது வழக்கமான நடைமுறையில் உள்ளது. எனவே 2024-25ம் நிதி ஆண்டிற்குறிய முதலாம் அரையாண்டுக்கான சொத்து வரியை பொதுமக்கள் வரும் 30ம் தேதிக்குள் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டி முடிக்காத சொத்து உரிமையாளர்களிடம் சொத்து வரியுடன் கூடுதலாக 1 சதவீதம் அபராத தொகையாக வசூலிக்கப்படும், எனவே அதனை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் தாங்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை விரைவாக அபராதமின்றி செலுத்தி பயனடையுமாறு செயல் அலுவலர் மாலதி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு