வரிப்பிலான்குளம் ஆலய அர்ச்சிப்பு பெருவிழா

சாத்தான்குளம், ஜூலை 23: சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பங்கிற்குட்பட்ட வரிப்பிலான்குளம் கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய அர்ச்சிப்பு பெருவிழா திருப்பலி, நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஆலய அடிக்கல் நாட்டு விழா, கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளாக ஆலய கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆலய அர்ச்சிப்பு பெருவிழா திருப்பலி, நேற்று முன்தினம் நடந்த்து. விழாவில் பங்கேற்க வந்த தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபனுக்கு ஊர் எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் ஆலய கட்டுமான பணிக்குழு செயலாளர் ஐகோர்ட் துரை, பொருளாளர் சந்தன மரியான் ஆசிரியர் முன்னிலையில் புதிய ஆலயத்தை ஆயர் ஸ்டீபன் அர்ச்சித்து திறந்து வைத்தார். நெடுங்குளம் பங்குதந்தை சேவியர் கிங்ஸ்டன் வரவேற்றார். ஆலயத்தில் அர்ச்சிப்பு பெருவிழா திருப்பலி நடந்த்து. இதில் சுற்றுவட்டார மறை மாவட்ட பங்குதந்தைகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கட்டுமான பணியாளர்கள், திருப்பணி பணியாளர்கள் பாராட்டப்பட்டனர். அன்பின் விருந்தும் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நெடுங்குளம் பங்குதந்தை சேவியர் கிங்ஸ்டன் மற்றும் வரிப்பிலான்குளம் பங்கு சபை மக்கள் செய்திருந்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்