வரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா

நன்றி குங்குமம் டாக்டர்குழந்தையின்மை குறை கொண்ட தம்பதியருக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஐ.வி.எஃப் சிகிச்சை போல, வாடகைத்தாய் முறையும் உதவியாக இருந்துவந்தது. நாளடைவில் இதில் பல்வேறு புகார்களும், சர்ச்சைகளும் எழுந்த நிலையில், இதனை ஒழுங்குபடுத்தும் விதத்தில் புதிய மசோதா ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது மத்திய அரசு. வாடகைத்தாய் முறையை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதா கடந்த 2016-ம் ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் இந்த மசோதாவில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு சமீபத்தில் மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்பு குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதா இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘‘புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணியத்தை பாதுகாக்கும். இதனை வியாபார ரீதியில் செய்து கொள்ள முடியாது. குடும்ப நலனைக் காக்கும் பொருட்டே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா இதுபற்றி விளக்கமளித்திருக்கிறார். இந்த மசோதாவில் குறிப்பிடத்தக்க, வரவேற்க வேண்டிய பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற நினைப்பவர்கள் இந்திய தம்பதிகளாக இருக்க வேண்டும். திருமணம் ஆகி குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். குழந்தைப்பேறுக்கு வாய்ப்பில்லாதவராக தம்பதியரில் ஒருவர் இருக்க வேண்டும். *நெருங்கிய சொந்தத்தில் இருக்கும் ஒருவரையே வாடகைத் தாயாக தேர்ந்தெடுக்க வேண்டும். வாடகைத்தாய்க்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்க வேண்டும். *மருத்துவ செலவை தவிர வேறு எந்த வகையிலும் பணம் வழங்கப்படாது. வாடகைத்தாய்க்கும் சம்பந்தப்பட்ட தம்பதிக்கும் தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகள் தகுதி சான்றிதழ்களை வழங்க தகுந்த அதிகாரிகளை நியமிக்கும். *வணிக ரீதியில் வாடகைத் தாய்களை பயன்படுத்துபவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். குழந்தையை பெற்றுத்தர பணம் வாங்குபவர்களுக்கு 10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.– ஜி.ஸ்ரீவித்யா

Related posts

அதிகரிக்கும் லேட் நைட் உணவுகள்… காத்திருக்கும் ஆபத்துகள்!

நலம் தரும் நவதானியங்கள்!

வாய் துர்நாற்றத்தை போக்க எளிய வழிகள்!