வரலட்சுமி நோன்பு எதிரொலி பூ, பழங்கள் விலை உயர்வு

அரூர் : வரலட்சுமி நோன்பு காரணமாக அரூரில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்துள்ளது.ஆண்டுதோறும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமியை வேண்டி வரலட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது. பெண்கள் அன்றைய தினம் வீடுகளில் கலசம் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி, பின்னர் சுமங்கலி பெண்களை வீட்டிற்கு வரவழைத்து மஞ்சள், குங்குமம், பூ, தாம்பூலம், துணிகள் உள்ளிட்டவற்றை வழங்கி ஆசி பெருவது வழக்கம். வரலட்சுமி நோன்புக்காக அரூர் பகுதியில் பூக்கள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் பூக்கள் மற்றும் பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிலோ ₹400க்கு விற்பனையான குண்டுமல்லி நேற்று கிலோ ₹800க்கும், முல்லை ₹300ல் இருந்து ₹700 ஆக அனைத்து பூக்களும் 3 மடங்கு விலை அதிகரித்துள்ளது. அதேபோல் பழங்களின் விலையும் வழக்கத்தை காட்டிலும் அதிகரித்திருந்தது….

Related posts

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு

ஏடிஎம் மெஷினை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை