வரத்து குறைவால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்வு

சென்னை: அண்டை மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு நாளைக்கு 1,000 முதல் 1,200 டன் தக்காளி தேவைப்படுவதாக கூறும் வியாபாரிகள் தற்போது 700 டன் அளவிற்கே தக்காளி வருவதாக கூறுகின்றனர்.கோடைகாலம் என்பதால் அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விலையில் பெங்களூரு தக்காளி ரூ.70-க்கும், நாட்டு தக்காளி ரூ.60-க்கும் விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் பெங்களூரு தக்காளி ரூ.85-க்கும், நாட்டு தக்காளி ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தக்காளி மட்டுமின்றி பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு தக்காளி அதிகமாகவே இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்….

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்