வரத்து குறைவால் உயரும் காய்கறிகள் விலை

மதுரை, ஜூன் 4: மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து சரிவால் விலை அதிகரித்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை விபரம் வருமாறு(ஒரு கிலோவிற்கான விலை): கத்தரிக்காய் கிலோ ரூ.30 முதல் ரூ.50வரை, வெண்டைக்காய் ரூ.20 முதல் ரூ.30வரை, பாகற்காய் ரூ.40 முதல் ரூ.60 வரை, புடலங்காய் ரூ.20 முதல் ரூ.30வரை, உருட்டு மிளகாய் ரூ.100 முதல் ரூ.140வரை, சம்பா மிளகாய் ரூ.110 முதல் ரூ.140வரை, சீனி அவரைக்காய் ரூ.30 முதல் ரூ.40வரை, பீர்க்கங்காய் ரூ.40 முதல் ரூ.60வரை, சுரைக்காய் ரூ.20 முதல் ரூ.50வரை.

மாங்காய் கல்லாமை கிலோ ரூ.30 முதல் ரூ.40வரை, மாங்காய் நாடு ரூ.25 முதல் ரூ.30வரை, நெல்லிக்காய் ரூ.40 முதல் ரூ.60வரை, சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.75வரை, பல்லாரி ரூ.20 முதல் ரூ.35வரை, கருவேப்பிலை ரூ.40, மல்லி ரூ.140, புதினா ரூ.40, இஞ்சி ரூ.160, முருங்கைக்காய் ரூ.40. தக்காளி மொத்த விலையில் 15கிலோ உள்ள பெட்டியின் விலை ரூ.200 முதல் ரூ.380 வரையிலும், சில்லரையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் விற்கிறது.

முருங்கை பீன்ஸ் கிலோ ரூ.100 முதல் ரூ.120வரை, சவ்சவ் ரூ.25. மாட்டுத்தாவணி மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, ‘‘மலைக்காய்கறிகள் மட்டுமல்லாது, நாட்டு காய்கறிகள் விலையும் அதிகரித்துள்ளது. வரத்து குறைவு, முகூர்த்தம் நாள் உள்ளிட்ட காரணங்களால் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் காய்கறிகள் விலை குறைவதற்கான வாய்ப்பிருக்கிறது’’ என்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு