வரத்து அதிகரிப்பால் நெத்திலி மீன்களை கருவாடாக மாற்றும் பணியில் மீனவர்கள் தீவிரம்

மரக்காணம்: மரக்காணம் பகுதியில் அழகன்குப்பம், வசவன்குப்பம், கைப்பாணிகுப்பம், எக்கியர்குப்பம், மண்டவாய் புதுக்குப்பம், அனுமந்தைகுப்பம் ஆகிய  மீனவர் கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தினமும் கடலுக்கு சென்று பல்வேறு வகையிலான மீன்களை பிடித்து வருகின்றனர்.  இந்த மீன்களை புதுவை, கேரளா போன்ற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக கடலில் ஏற்பட்டுள்ள பருவநிலை  மாற்றத்தினால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் வலையில் மீன்கள் கிடைப்பது இல்லை. இதனால் பெரும்பாலான மீனவர்கள் வலையில் மீன்கள்  இல்லாமல் கரை திரும்புகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலையில் அதிகளவில்  நெத்திலி மீன்கள் கிடைக்கிறது.  இதுபோல் அதிகளவில் கிடைக்கும் இந்த மீன்களை உடனடியாக மார்க்கெட்டில் விற்பனை செய்ய முடியாமல்  மீனவர்கள் அவற்றை கருவாடாக உலர்த்தும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.  …

Related posts

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட 1,156 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு