வரதட்சணை கேட்டு கொடுமை துணை தாசில்தார் மீது மனைவி போலீசில் புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(39). இவர் திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றுகிறார். இவரின் மனைவி நிவேதா(32). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ராஜேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு நிவேதாவை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. மேலும் தகாத வார்த்தைகளால் பேசி தினமும் சித்ரவதை செய்ததுடன் வீட்டைவிட்டு வெளியே துரத்திவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து நிவேதா திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் ராஜேஷ்குமார், மாமியார் மாலா, கணவரின் அண்ணன் பிரேம்குமார் ஆகியோர் சேர்ந்து வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில், துணை தாசில்தார் ராஜேஷ்குமார் உள்பட 3 பேர் மீது இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வரதட்சணை கொடுமையால் துணை தாசில்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 55 வருடம் சிறை

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?