வயலப்பாடி ஊராட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

 

குன்னம், பிப்.16: பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் வயலப்பாடி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் பொதுமக்களுக்கு சென்று சேர்க்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தினந்தோறும் கிராம ஊராட்சிகளில் வீடியோ படக்காட்சிகள் நடத்துதல்,

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலும், முதலமைச்சர், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட அரசு விழாக்களின் தொகுப்பாக சிறு புகைப்படக் கண்காட்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சி பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வயலப்பாடி ஊராட்சியில் நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்படக் கண்காட்சியை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்