வன்முறையில் பலியான 4 விவசாயிகளுக்கு லக்கிம்பூரில் இன்று இறுதி பிரார்த்தனை: அடுத்தடுத்த போராட்டங்கள் தொடங்குகிறது

லக்னோ: லக்கிம்பூர் வன்முறையில் பலியான 4 விவசாயிகளுக்கு இறுதி பிரார்த்தனை செய்யும் நிகழ்ச்சி உத்தரப்பிரதேசத்தில் இன்று நடக்க உள்ளது. இதையொட்டி ஏராளமான விவசாயிகள் அங்கு சென்றுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 விவசாயிகள் பலியாகினர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் பாஜவினர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது ஆசிஷ் மிஸ்ராவும் சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் மீது உபி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த சனிக்கிழமை, சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆஜரான ஆசிஷ் மிஸ்ரா சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனால் 12 மணி நேர விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வன்முறையில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக அடுத்தடுத்து போராட்டங்களை நடத்துவதாக பாரதிய கிசான் சங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி, பலியான 4 விவசாயிகளுக்கு லக்கிம்பூர் மாவட்டத்தில் வன்முறை நிகழ்ந்த இடத்திற்கு அருகில் டிகோனியா கிராமத்தில் இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சி இன்று நடக்க உள்ளது. இதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் விவசாயிகள் திரளாக பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் எந்த அரசியல் கட்சிக்கும் அனுமதி இல்லை என விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் அறிவித்துள்ளார். முழுக்க முழுக்க விவசாயிகள் மட்டுமே அமைதியான முறையில் பிரார்த்தனை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் 18ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். லக்னோவில் வரும் 26ம் தேதி மகா பஞ்சாயத்து நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் உபியில் பெரிய அளவில் விவசாயிகள் கூடுவதால் அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி வரை உபி போலீசார் அனைவரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டு பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.* 3 நாள் போலீஸ் காவல்கைதான அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, லக்கிம்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீசார் 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். ஆனால் தலைமை ஜூடிசியல் மேஜிஸ்திரேட் சின்தாராம், 3 நாளில் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து வரும் 15ம் தேதி காலை வரை 3 நாட்கள் ஆசிஷ் மிஸ்ராவை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். * நாடு முழுவதும் மவுன போராட்டம்லக்கிம்பூர் வன்முறையில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்தும், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி விலகக் கோரியும் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நேற்று அமைதி போராட்டம் நடந்தது. பல்வேறு மாநிலங்களில் ஆளுநர் மாளிகை முன்பாக காங்கிரசார் அமைதியான முறையில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்….

Related posts

மணிப்பூர் மக்களுக்கு அமைதி தேவை: ராகுல் காந்தி பேட்டி

ஜார்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு வெற்றி: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

கட்சி சின்னம் கைவிட்டு போனது என்று சும்மா… குழந்தை போல் அழாதீர்கள்: உத்தவை விமர்சித்த ஏக்நாத் ஷிண்டே!