வனபத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.43.66 லட்சம்

 

மேட்டுப்பாளையம், ஆக.5: மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடிக்குண்டம் திருவிழா, ஆடி வெள்ளிக்கிழமைகள், அமாவாசை தினங்களில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனின் அருளாசி பெற்று செல்வது வழக்கம். மேலும், அம்மனை வேண்டி மொட்டை அடித்தும், கிடா வெட்டியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். மேலும், அம்மனை வேண்டி உண்டியலில் காணிக்கை செலுத்துவர்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 15-ம் தேதி முதல் நேற்று 4ம் தேதி வரை 78 நாட்களில் பக்தர்கள் பொது உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பின்னர் கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கருணாநிதி மேற்பார்வையில் 20 பொது உண்டியல்கள் திறக்கப்பட்டு காலை 10.30 மணிக்கு காணிக்கைகளை எண்ணும் பணியானது துவங்கியது. இப்பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் ஈடுபட்டனர். மாலையில் காணிக்கைகள் எண்ணும் பணியானது நிறைவடைந்தது.
இறுதியாக பக்தர்கள் கடந்த 78 நாட்களில் ரொக்கமாக ரூ.43,66,192-ம், தங்கம் 206 கிராம், வெள்ளி 661 கிராம் உள்ளிட்ட காணிக்கைகளை செலுத்தியுள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு