வனத்துறையை கண்டித்து விவசாயிகள் தர்ணா

தொண்டாமுத்தூர், ஏப்.6: யானைகளை விரட்ட மெத்தன போக்கை கடைபிடித்து வரும் வனத்துறையை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட கரடிமடை, மத்திப்பாளையம், குப்பனூர், பச்சாபாளையம், தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 1 வாரமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. கரடிமடை, மத்திபாளையம் பகுதியில் 7க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன.

யானைகளை விரட்ட தகவல் கொடுத்தும் வனத்துறையினர் மெத்தன போக்கு காட்டி வருவதாகவும், விவசாயிகள் யானைகளை விரட்டினால் அவர்களை மிரட்டி பொய் வழக்கு போடுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதற்கிடையே, சிறுவாணி சாலை மாதம்பட்டி தண்ணீர்பந்தல் நால் ரோடு சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை அவ்வழியாக வந்த வாகனங்களை சிறைபிடித்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வனத்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு