வனத்துறையின் சார்பில் விவசாயிகளின் குறை தீர்ப்பு கூட்டம்

துவரங்குறிச்சி,ஏப்.21: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் துவரங்குறிச்சி வனச்சரகம் மற்றும் மணப்பாறை வனச்சரகம் இணைந்து நடத்திய விவசாயிகளின் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விளைநிலங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்சனைகளை வனத்துறையினரிடம் கூறி அதனை தடுக்கும் பொருட்டு சோலார் மின் வேலி மற்றும் நீர் தொட்டிகள் அமைக்க வேண்டும், தேவையான தீவனப் பயிர்களை வனப்பகுதிகளில் ஏற்படுத்தி தருவது, வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து பேசிய வனத்துறையினர் வனவிலங்குகளை விவசாய நிலங்களில் நுழையாமல் தடுக்கும் பொருட்டு நீல்போ என்னும் தெளிப்பானை பயன்படுத்த அறிவுரை அறிவுறுத்தப்பட்டது. மேலும் காப்புக் காடுகளில் பழம் தரும் மரக்கன்றுகளை நடவு செய்வதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு