வத்திராயிருப்பு அருகே ரூ.11 லட்சத்தில் வன வேட்டை கும்பலை கண்காணிக்க ‘வாட்ச் டவர்’

 

வத்திராயிருப்பு, ஜூலை 12: வத்திராயிருப்பு அருகே வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பலை கண்காணிக்க ரூ.11 லட்சத்தில் டவர் அமைக்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு யானை, புலி, கரடி, மான், காட்டெருமை காட்டுப்பன்றி, சிறுத்தை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அத்துமீறி வனப்பகுதிக்குள் புகும் சமூகவிரோதிகள் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக வனத்துறை புகார் வந்தது.

இந்நிலையில், வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் அத்திதுண்டு வனப்பகுதியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் 30 அடி உயரத்தில் வாட்ச் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வனத்துறையினர் தங்குவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அத்தித்துண்டு பகுதியில் ரூ.11 லட்சத்தில் வாட்ச் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வனத்துறையினர் தங்கி சமூக விரோதிகளை கண்காணித்து வருகின்றனர். வனவிலங்குகளை வேட்டையாடப்படுவதை தடுக்க இந்த வாட்ச் டவர் உதவியாக இருக்கும்’ என்றார்.

Related posts

சேலத்தில் 59.1 மி.மீ. மழை

டூவீலர் எரிந்து நாசம்

கோவை- லோக்மான்யதிலக் ரயில் 4 மணி நேரம் தாமதம்