வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் தீ: தீயை அணைக்கும் பணியில் வனத்துறை தீவிரம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு வனச்சரக பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென காட்டுத்தீ பற்றியது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.வத்திராயிருப்பு அருகே, மேற்குத்தொடர்ச்சி மலை பகுதி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு தாணிப்பாறைக்கு மேற்கே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில், வல்லாளம் பாறை பகுதியில் திடீரென காட்டு தீ பற்றியது. தீ மளமளவேன மற்ற பகுதிகளுக்கு பரவியது. இதனால் அப்பகுதியில் இருந்த விலங்குகள் வேறு இடத்திற்கு தப்பி ஓடின. மேலும் தீயால் பலவகை அரிய மூலிகை மரங்கள் எரிந்து நாசமாகின. இதுபற்றி தகவலறிந்ததும் வனவர் அபிஷேக்குமார் தலைமையில் 15க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நள்ளிரவில் முதல் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அதிகாமாக காற்று வீசுவதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 2வது நாளாக நேற்று மாலை வரை தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்….

Related posts

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் மீண்டும் துவங்கிய ரோப் கார் சேவை: 5 நாளில் 1,230 பக்தர்கள் பயணம்

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல்