வத்திராயிருப்பு அருகே சாலையில் எரிக்கப்படும் குப்பைகள்: வாகன ஓட்டிகள் அவதி

 

வத்திராயிருப்பு, செப்.2: வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தர விநாயகர்புரம், வ.புதூர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதிகள் மகாராஜபுரம் ஊராட்சியில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் குப்பைகளை சரிவர அகற்றாததால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால், அதிலிருந்து வரும் புகையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குப்பை எரிப்பதனால், பள்ளிக்கு நடந்து செல்லக்கூடிய பள்ளி மாணவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி சாலையினை கடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ஆகையால் தேங்க கூடிய குப்பைகளை அங்கிருந்து அகற்றவும், கழிவுநீர் கால்வாயினை சுத்தம் செய்யவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்