வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினருக்கு மினி தீயணைப்பு லாரி வழங்க வேண்டும்

வத்தலக்குண்டு, டிச. 9: வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினருக்கு மினி தீயணைப்பு லாரி வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்தலக்குண்டு ஒன்றியத்தில் 17 ஊராட்சிகள் உள்ளன. இதில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் செல்லும் வாகனங்கள், சபரிமலை பக்தர்கள் செல்லும் வாகனங்கள் என எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும்.

வத்தலக்குண்டு கடை வீதி உள்பட பல வீதிகள் குறுகலாகவே உள்ளது. இதனால் தீ விபத்து சமயங்களில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் சில இடங்களில் தீயை அணைக்க குறிப்பிட்ட நேரத்தில் செல்ல தாமதம் ஏற்பட்டு தீயானது வீட்டை எரித்து நாசமாக்கி விடுகிறது. இதுதவிர வத்தலக்குண்டு மஞ்சளாறு ஊருக்கு நடுவே வளைந்து வளைந்து செல்வதால் அடிக்கடி பாம்புகள் தெருக்குள் படையெடுக்கின்றன.

இதனால் பாம்புகளை பிடிக்க தீயணைப்பு துறையினர் பெரிய வண்டியை கொண்டு செல்ல தாமதம் ஏற்படுகிறது. மேலும் கொடைக்கானல் மலைச்சாலையில் விபத்து ஏற்படும் போது பெரிய வண்டியில் விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தமிழக அரசு திண்டுக்கல் போன்ற பெரிய நகரங்களில் உள்ளது போல தீயணைப்பு துறையினருக்கு மினி தீயணைப்பு லாரி வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்