வத்தலக்குண்டு அருகே செக்போஸ்ட்டில் போலீஸ்காரர்களை தாக்கிய போதை வாலிபர்கள் கைது

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே செக்போஸ்ட்டில் போலீஸ்காரர்களை தாக்கிய போதை வாலிபர்கள் 3 பேர் கைதாயினர். 3 பேரை தேடி வருகின்றனர்.  திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு  அருகே விருவீடுவில் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு கடந்த ஜூன் 23ம் தேதி  போலீசார் மேகநாதன், சீராளன் பணியில் இருந்தனர். அப்போது முத்துமாணிக்கம் (27), காளிதாஸ் (29),  ரஞ்சித் (27) உள்பட 6 பேர் 3 டூவீலர்களில் மதுபோதையில் வந்தனர்.  சோதனைச்சாவடி அருகே வந்தபோது முத்துமாணிக்கம் ஓட்டி வந்த டூவீலர்  பேரிகார்டில் மோதியது. இதில் டூவீலர் கவிழ்ந்து கீழே விழுந்த  முத்துமாணிக்கம் உள்பட 2 பேரை, போலீஸ்காரர் மேகநாதன் தூக்கி விட்டு  அறிவுரை கூறினார். அப்போது பின்னால் வந்த மற்ற 4 பேரும் முத்துமாணிக்கத்தை  தாக்கியதாக கூறி அங்கு கீழே கிடந்த தென்னை மட்டை, உருட்டுக்கட்டை  போன்றவற்றால் மேகநாதனை சரமாரியாக தாக்கினர். தடுக்க வந்த சீராளனுக்கும்  அடி விழுந்தது. பின்னர் போலீசார், முத்துமாணிக்கம்,  காளிதாஸ், ரஞ்சித் ஆகியோரை கைது செய்தார். 3 பேரையும் நிலக்கோட்டை  கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரியகுளம் சிறையில் அடைத்தனர்.  காயமடைந்த மேகநாதன் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகிறார். இந்த தாக்குதலில் தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  போலீசாரை தாக்கிய இச்சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

வேலை பார்த்த இடத்தில் உரிமையாளர் என ஏமாற்றி வசூல் ஓட்டலில் பங்குதாரராக சேர்ப்பதாக ரூ.1.25 கோடி மோசடி செய்த மேலாளர்: ஆந்திராவில் பதுங்கியவர் கைது

வெளிநாடுகளில் விற்பனை செய்ய காரில் கடத்திய ரூ.22 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: 3 பேர் கைது

பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலி, தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: அரிவாளுடன் முதியவர் போலீசில் சரண்