வத்தலக்குண்டுவில் ரூ.1.50 கோடி செலவில் சாலை பணி துவக்கம்

வத்தலக்குண்டு, செப். 17: வத்தலக்குண்டுவில் இருந்து ஆடு சாபட்டிக்கு ரூ.1 கோடியே 50 லட்சத்தில் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ராஜேந்திரன், துணை தலைவர் தர்மலிங்கம், திமுக நகர செயலாளர் சின்னத்துரை முன்னிலை வைத்தனர். பேரூராட்சிகளின் துணை இயக்குனர் மனோரஞ்சிதம் சாலை பணியை துவக்கி வைத்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி நன்றி கூறினார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு