வத்தலக்குண்டுவில் ஆலோசனை கூட்டம்

வத்தலக்குண்டு, ஆக. 6: வத்தலக்குண்டு பேரூராட்சி சார்பில் பாலித்தீன் பை ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் தலைமை வகிக்க துணைத் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார் . கூட்டத்தில் வர்த்தக சங்கம், ஹோட்டல் பேக்கரி உரிமையாளர் சங்கம் திருமண மஹால் உரிமையாளர்கள் என தனித்தனியாக கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன . வத்தலக்குண்டு பேரூராட்சியில் பாலித்தீன் பை பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு வரும் ஒரு வாரத்திற்குள் கடைகளில் பாலித்தீன் பைகளை அகற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு அகற்றவில்லை என்றால் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்தார் . கூட்டத்தில் அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவாக தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி நன்றி கூறினார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை