வதிலை மல்லனம்பட்டியில் திறந்தவெளி கிணற்றிற்கு போட்டாச்சு கம்பி வேலி

வத்தலக்குண்டு, அக். 28: தினகரன் செய்தி எதிரொலியாக வத்தலக்குண்டு அருகே மல்லனம்பட்டியில் பள்ளியையொட்டிய திறந்தவெளி கிணற்றுக்கு கம்பி வேலி அமைக்கப்பட்டது. வத்தலக்குண்டு ஒன்றியம், மல்லனம்பட்டியில் அரசு கள்ளர் நடுநிலை பள்ளியையொட்டி கைப்பிடி சுவர் இல்லாமல் ஒரு திறந்தவெளி கிணறு இருந்தது. இதனால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது என தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வத்தலக்குண்டு ஒன்றியம் மற்றும் மல்லனம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு திறந்தவெளி கிணற்றிற்கு கம்பி பாதுகாப்பான முறையில் வேலி அமைத்தனர். மாணவ, மாணவிகள் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் மற்றும் நடவடிக்கை எடுத்த ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், முனியாண்டி, உதவி பொறியாளர் டெல்லி ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஆகியோருக்கு ஊர் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி