வண்ண மீன் வளர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் நடுத்தர அளவு வண்ண மீன் வளர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம், என்று கலெக்டர் அமிர்தஜோதி அறிவித்துள்ளார். சென்னை  கலெக்டர் அமிர்தஜோதி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ‘’நடுத்தர அளவு வண்ண மீன் வளர்ப்பு அலகு’’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மீனவர்கள், மீன் வளர்ப்ேபார், சுய உதவிக் குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்கள், மீன் வளர்ப்ேபார் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில் முனனவோர், தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்ெபறலாம். இந்த திட்டத்தின் கீழ், பொது பிரிவினருக்கு 40 விழுக்காடு ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதியுதவியும் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிருக்கு 60 விழுக்காடு ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதியுதவியும் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், சென்னை, எண்.57, சூரியநாராயண செட்டி ெதரு, ராயபுரம் சென்னை- 13 தொலைபேசி எண்.044-29997697 அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை