வணிக தொடர்பாளர்களுக்கு அடிப்படை சம்பளம் வேண்டும்: கலெக்டரிடம் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் வங்கி தொடர்பாளர்கள், வணிக தொடர்பாளர்களுக்கு அடிப்படை சம்பளம் வேண்டும் என கலெக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் கனரா வங்கியில் கடந்த 10 ஆண்டுகளாக 26 வணிக தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டு, மத்திய மற்றும் தமிழக அரசின் வங்கி மூலம் வழங்கப்படும் நல்ல திட்டங்களை மக்களின் விருப்பத்துக்கு வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். அவர்கள், முதியோர் உதவித்தொகை,  ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் அரசின் அனைத்து திட்டங்களின் வங்கி சேவைகளை சிறு கிராமங்களும் பயன்பெறும் வகையில் பாலமாக செயல்படுகின்றனர். மேலும், புதிய வங்கி கணக்கு துவங்குதல், பணம் செலுத்துதல், பணம் பெறுதல், சிறு குழு கடன் பெற்று தருதல், விவசாய கடன் பெறுதல் ஆகிய பணிகளையும் மாநில அரசுக்கு உறுதுணையாக செய்கின்றனர்.அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் மற்றும் கமிஷன் தொகை தற்போது குறைத்து வழங்கப்படுகிறது. முதலில் இதற்கு பயன்படும் இயந்திரத்துக்கு கட்டிய பணம் திருப்பி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அதை தர இயலாது என தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் சேவை கட்டணத்தை அதிகப்படுத்தவும் பேரிடர் காலங்களில் செயல்பட்டதால் முன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். அடிப்படை ஊதியத்தை 10 ஆயிரமாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை உள்ளன….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை