வட மாநிலங்களை வாட்டுகிறது குளிர்

புதுடெல்லி: வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வருவதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் வடக்கு, வடமேற்கு மாநிலங்களில் சமீப நாட்களாக கடும் குளிர் அடித்து வருகிறது. அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளில் கடுமையான குளிர் அலை காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக், கில்ஜித்-பாலுதிஸ்தான் மற்றும் முசாபர்பாத், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலும் குளிர் அலை வீசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  ராஜஸ்தானின் சுரு பகுதியில்  மிக குறைந்தபட்சமாக மைனஸ் 2.6 டிசிரி செல்சியஸ், சிகாரில் மைனஸ் 2.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்பட்டது. உத்தரகாண்டின் சில பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. வடமேற்கு இந்திய பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை மற்றும் கடுமையான குளிர் அலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரபலமான தால் ஏரி உறைந்து காணப்படுகிறது….

Related posts

உச்சநீதிமன்ற கேன்டீனில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

தெலுங்கானாவில் மேடை சரிந்து கீழே விழுந்த நடிகை.. லேசான காயத்துடன் உயிர் தப்பினேன்: பிரியங்கா மோகன் பதிவு!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்: இன்றிரவு விஸ்வசேனாதிபதி வீதியுலா