வட்டார வள மையங்களில் பள்ளி மாணவர்களுக்கு புத்தக திருவிழா போட்டி

 

தூத்துக்குடி, செப். 25: தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில் வரும் அக்.3ம் தேதி முதல் 13ம் தேதி வரை புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலைத்திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வழிகாட்டுதலின்படி, அனைத்து வகைப் பள்ளிகளிலும் 5 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு புத்தக திருவிழா தொடர்பாக ஆர்வமூட்டும் வகையில் போட்டிகள், 13 வட்டார வள மையங்களில் நேற்று நடைபெற்றது.

இதில் பேச்சு, கவிதை, கட்டுரை, வினாடி -வினா, ஓவியம் வரைதல், நூல் பெயர், நூலாசிரியர் பெயர் நினைவு கூர்தல், ஒப்புவித்தல் ஆகிய போட்டிகளில் 2,397 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு வகைப் போட்டிகளிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள் புத்தகத் திருவிழாவின் போது நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பை பெறுவர். இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

தூய்மை பணியாளர்களுக்கு கயத்தாறில் மருத்துவ முகாம்

தூத்துக்குடி சிதம்பரநகர் சாலையில் வரும் 29ல் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி

திருவெறும்பூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு