வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டித்தேர்வு

 

நாமக்கல், செப்.11: தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி துறையில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டி தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும், தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்விற்காக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, 1,409 பேர் விண்ணப்பம் செய்து ஹால் டிக்கட் பெற்றிருந்தனர். ஆசிரியர் தேர்வு வாரிய விதிமுறைப்படி தேர்வு நடைபெற்றது.
நாமக்கல் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை, கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 4 மையங்களில் நடைபெற்ற தேர்வில், மொத்தம் 1,196 தேர்வு எழுதினார்கள். 213 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த போட்டித் தேர்வு, நடத்தப்பட்டது. தேர்வையொட்டி நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வர்கள் வந்து செல்ல அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Related posts

திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு

அரசு அலுவலகங்களில் ‘தமிழ் வாழ்க’ மின்னொளி பெயர்ப்பலகை பழுது: சீரமைக்க கோரிக்கை

மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்