வட்டார கல்வி அலுவலர் தேர்வை 866 பேர் எழுதினர் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆய்வு வேலூர் மாவட்டத்தில் 4 மையங்களில்

 

வேலூர், செப்.11: வேலூர் மாவட்டத்தில் 4 மையங்களில் நடந்த வட்டார கல்வி அலுவலர் தேர்வை 866 பேர் எழுதினர். இத்தேர்வை தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றுவதற்கு வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்வதற்கான தேர்வுகள் செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 6ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் வட்டாரக் கல்வி அலுலவர் பணிக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் அவகாசம் கேட்டுள்ளதால், ஜூலை 12ம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் வட்டார கல்வி அலுவலர் தேர்வு நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி, காட்பாடியில் உள்ள ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 4 மையங்களில் தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வை மையங்களில் மொத்தம் 1,022 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்வை 866 பேர் எழுதினர். 156 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வை தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உடனிருந்தார்.

நேற்று காலை தேர்வர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வு மையங்களின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 9.30 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் தேர்வர்கள் செல்போன், லேப்டாப் மற்றும் கால்குலேட்டர்கள் போன்ற உபகரணங்களை தேர்வு மையங்களின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது. முறைகேடுகளில் ஈடுபட்டால் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு எழுத தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். காட்பாடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த வட்டார கல்வி அலுவலருக்கான எழுத்து தேர்வை எழுதிய தேர்வாளர்கள்.

 

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்