வட்டார கல்வி அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டி தர கோரிக்கை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று சங்க கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வட்டார கல்வி அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான தேர்தல் திருவாரூரில் நேற்று மாநில தலைவர் ராமமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவராக முத்துப்பேட்டை வட்டார கல்வி அலுவலர் ராமசாமியும், மாவட்ட செயலாளராக திருவாரூர் வட்டார கல்வி அலுவலர் செல்வம், பொருளாளராக குடவாசல் வட்டார கல்வி அலுவலர் குமரேசன் மற்றும் பொறுப்பாளர்களாக வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயலட்சுமி, சம்பத், செல்வம், சுகந்தி, மணி மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களுக்கும் சொந்த கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்பது உட்பட பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறுவை சாகுபடிக்கு உழவு பணி

 

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி