வடுகபாளையம் பகுதியில் ஜல்லி கற்கள் கொட்டி ரயில் தண்டவாளத்தை பலப்படுத்தும் பணி தீவிரம்

பொள்ளாச்சி :  கோவையிலிருந்து பொள்ளாச்சி வரையிலான அகல ரயில் பாதையில், மின்மயமாக்கும் பணி சமீபத்தில் நிறைவடைந்ததால், அந்த வழித்தடத்தில் அவ்வப்போது மின்சார ரயில் அதிவேகத்துடன் சோதனையோட்டமாக இயக்கப்படுகிறது. தற்போது பொள்ளாச்சியிலிருந்து பழனி மற்றும் பாலக்காடு வரையிலும் மின் மயமாக்கல் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில், மின்மயமாக்கப்பட்ட, அகல ரயில்பாதை வழித்தடத்தில் தண்டவாள பகுதியை மேலும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, பொள்ளாச்சி-கோவை வழித்தட தண்டவாளத்தில் ஆங்காங்கே சிதறிய நிலையில் கிடந்த ஜல்லி கற்களை, சுழற்சி முறையில் சமப்படுத்துவதுடன், மணலை அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது.நவீன ராட்சத இன்ஜின் பொருந்திய இயந்திரம் மூலம், தண்டவாளத்தில் ஜல்லி கற்களை சுழற்சி முறையில் பரப்பி போட்டு உறுதிப்படுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. நேற்று வடுகபாளையம் பகுதியில், தண்டவாளத்தை உறுதிப்படுத்தும் பணி நடைபெற்றது. இதன் மூலம், அதிவேகமாக வரும் மின்சார ரயில், எந்தவித சிரமமின்றி விரைந்து கடந்து செல்வதற்கு வழிவகுக்கும் எனவும், சுமார் 10ஆண்டுகளுக்கு ஒருமுறை, சுழற்சி முறையில் ஜல்லி பரப்பி போட்டு தண்டவாளம் உறுதிப்படுத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இருநாட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனே அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை விமான நிலையத்தில் விமானம் பழுதுபார்க்கும் எம்ஆர்ஓ மையம் அமைக்கும் திட்டம் ரத்தா?: தமிழக அரசு 32,300 சதுர அடி நிலம் வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் ஆணையம் அலட்சியம்