புதுடெல்லி: வட மற்றும் வடமேற்கு இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரிக்கும் குறைவாக இருந்து வருகிறது. டெல்லியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 16.2 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 5.3 டிகிரி செல்சியசாகவும் பதிவானது. இது வழக்கமான வெப்பநிலையை விட 5 டிகிரி குறைவாகும். இதே போல, பஞ்சாப், அரியானா, சண்டிகர், மேற்கு உத்தரப்பிரதேசம், வடமேற்கு ராஜஸ்தானில் வழக்கத்தை விட 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்தது. பஞ்சாப், அரியானாவின் பல பகதிகளில் அடர்ந்த மூடுபனி நிலவுகிறது. இம்மாநிலங்களில் கடும் குளிர் நாளை வரை நீடிக்கும் என்றும் அதன்பின் படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….