வடமதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழா கூட்டம்: திமுக சார்பில் நடைபெற்றது

 

வடமதுரை, ஜூன் 23: வடமதுரை பேரூர் திமுக மற்றும் இளைஞரணி சார்பில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் திமுக அரசின் 2 ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வடமதுரை விகேஎஸ் நகரில் உள்ள கலைஞர் திடலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்திற்கு வடமதுரை திமுக நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பையன், வடமதுரை பேரூராட்சித் தலைவர் நிருபராணி கணேசன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமைக்கழக பேச்சாளர் போடி காமராஜ் தமிழக அரசின் இரண்டாண்டு ஆட்சியில் பொதுமக்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினார். அய்யலூர் நகர செயலாளர் கருப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், வடமதுரை நகர துணை செயலாளர் வீரமணி, கவுன்சிலர்கள் கார்த்திகேயன், தேன்மொழி, விஜயா, மகேஸ்வரி, சவுந்தர்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், மாணவரணி அமைப்பாளர் சசிகுமார், கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை