வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி தொடக்கம்

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு 210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ளது வடசென்னை அனல் மின் நிலையம். இங்குள்ள முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் 1வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கொதிகலன் பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை