வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு

தொண்டாமுத்தூர், ஜன.13: கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னெடுப்பில் இன்று (13ம் தேதி) கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அளவிலான சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை துடியலூர் எஸ்எஸ் கமலேஷ் திருமண மண்டபத்தில் நடக்கிறது. எனவே கோவை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில நிர்வாகிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகரம், பேரூர், வட்ட, கிளை கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, ஆதி திராவிடர் நலக்குழு, நெசவாளர் அணி, வர்த்தகர் அணி, மீனவர் அணி, அமைப்புச்சாரா ஓட்டுநர் அணி ஆகிய சார்பு அணிகளின் மாவட்ட தலைவர்கள், துணை தலைவர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை