வடக்கு தாமரைகுளத்தில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

 

அஞ்சுகிராமம்,ஜன.1: வடக்கு தாமரைகுளத்தில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார். தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்தவர் கனிராஜன். பெயின்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார்(19). தூத்துக்குடியில் உள்ள கல்லூரி ஒன்றில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சதீஷ்குமார் கல்லூரி விடுமுறை நாட்களில் விசேஷ வீடுகளில் அலங்காரம் செய்யும் வேலையும் செய்து வந்துள்ளார்.

அதற்காக தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த அமல்ராஜ் என்பவருடன் சென்று வருவார். நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளத்தில் உள்ள ஒரு விசேஷ வீட்டிற்கு அலங்காரம் செய்ய அமல்ராஜ் உடன் வந்துள்ளார். மாலை அந்த பகுதியில் உள்ள குளத்தில் கால்களைக் கழுவ படித்துறையில் இறங்கியவர் வழுக்கி விழுந்து மூழ்கினார்.

அவருடன் வந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சதீஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்