வடக்கின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியவர்; அண்ணா நாமம் வாழ்க : எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் புகழாரம்!

சென்னை : அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் சரித்திர நாயகன் அண்ணாவை பலரும் நினைவு கூறுகின்றனர். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “நம் கழகத்தின் முதல் பெயர், திராவிட கொள்கைகளை சென்னை மாகாணத்தில் வேரூன்ற வைத்து அதை தமிழ்நாடாக மாற்றிய புரட்சியாளர், சமூக நீதியை மேடை பேச்சிலிருந்து கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் விதைத்த பேரறிஞர் அவர்களின் 113ஆம் பிறந்த நாளில் “ #அண்ணா நாமம் வாழ்க” என்று வணங்கி போற்றுகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.இதே போல் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ஜனநாயகத்தின் விழுமியங்களின் மீது ஆழமான பற்றுக்கொண்டவர், மாநில சுயாட்சிக்காக வாதிட்டவர்,வடக்கின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியவர்,சிக்கனமாக ஆட்சி நடத்தி கடன் இல்லாமல் நிர்வாகம் செய்யவேண்டுமென விரும்பியவர் அறிஞர் அண்ணா. அவரின் நினைவுகளைப் போற்றுவோம்,’என்றார்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி