வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும்:  கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வட கிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் நாளை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்கள் உள்பட  தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில்  கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் தற்போது வட கடலோர தமிழ்நாட்டில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதன்படி வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் நேற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. சென்னையில் நேற்று மதியம் புறநகர் பகுதிகளிலும், சென்னையில் சில இடங்களிலும் மழை பலத்த இடியுடன் மழை பெய்தது.  இந்நிலையில், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யும். ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பிற மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்  இன்று பெய்யும். குறிப்பாக சென்னை முதல் தொண்டி வரையிலான கடலோரப்பகுதியில் இன்று மாலை 4 மணி முதல் மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே, வட கிழக்கு பருவமழை பெய்யத் தொடங்குவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் காரணமாக நாளை பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை தொடங்கும் பட்சத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென் காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன்கூடிய மழையும் நாளை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை