வடகிழக்கு பருவமழை சமாளிப்பது குறித்து தீயணைப்பு துறையினர் பயிற்சி

வேதாரண்யம்,ஜூைலை25: வேதாரண்யம் தீயணைப்பு நிலைய அலுவலர் அம்பிகாபதி தலைமையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஏற்படும் இடர்பாடுகளை சமாளிப்பது எப்படி என்பது குறித்து பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் தீயணைப்பு நிலைய பணியாளர்கள் வேதாரண்யம் நிலைய எல்லைக்குட்பட்ட அகஸ்தியன் பள்ளி, கருப்பம்புலம், அரசு மருத்துவமனை, வேதாரண்யம் பெரிய கோயில் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பிரசாரம் நடத்தினர். நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோயில் செயல் அலுவலர் அறிவழகன், கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன், அரசு மருத்துவமனை டாக்டர் நிலவழகி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்