வங்கதேசத்துடன் 5வது டி20 நியூசிலாந்துக்கு ஆறுதல் வெற்றி

தாக்கா: வங்கதேசத்துடன் நடந்த 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில், நியூசிலாந்து அணி 27 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. நான்கு போட்டிகளின் முடிவில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற வங்கதேச அணி தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், கடைசி போட்டி மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்று பேட் செய்த நியூசி. 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. ஃபின் ஆலன் 41 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ரச்சின் ரவிந்திரா 17, நிகோல்ஸ் 20 ரன் எடுத்தனர். கேப்டன் டாம் லாதம் 50 ரன் (37 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), கோல் மெக்கான்சி 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து 27 ரன் வித்தியாசத்தில் தோற்றது. முகமது நயிம், கேப்டன் மகமதுல்லா தலா 23 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். அபிப் உசேன் 49 ரன் (33 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), நசும் அகமது 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. ஆறுதல் வெற்றியை வசப்படுத்த, வங்கதேசம் 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. நியூசி. கேப்டன் டாம் லாதம் ஆட்ட நாயகன் விருதும், வங்கதேசத்தின் நசும் அகமது தொடர் நாயகன் விருதும் பெற்றனர்….

Related posts

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ்

யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து முன்னேற்றம்

ஜிம்பாவேயுடன் 2வது டி20: 100 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: அபிஷேக் அதிரடி சதம்